Logo

மேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 3!!

மேற்கத்திய நாடுகளை போன்று இந்தியாவின் நிலைபாடு இல்லை என்பதற்கு மற்றுமோர் கருத்தை முன்வைத்துள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்.
 | 

மேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 3!!

மேற்கத்திய நாடுகளை போன்று இந்தியாவின் நிலைபாடு இல்லை என்பதற்கு மற்றுமோர் கருத்தை முன்வைத்துள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர். 

மேற்கத்திய நாடுகளில் பிறரை அடக்கி ஆள வேண்டும் என்ற நிலைபாடு சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. அதாவது காலனித்துவ மனநிலையை மையமாகக் கொண்டுள்ளது. அங்கு ஒருமித்த கருத்து உள்ளவர்களுக்கே இடமளிக்கப்படுகின்றது. ஒரே மதம், மொழி, இனத்தையே மக்கள் பின்பற்றி வருகின்றனர். இதற்கு அவர்களின் வரவாறும் ஓர் காரணம். பண்டு தொட்டே அவர்களது நிலைபாடு அப்படியாக தான் அமைந்திருக்கிறது. மிகவும் கடினமான மேற்கத்திய தேசியவாதிகள் தினசரி அடிப்படையிலேயே தங்களின் வெறுப்புணர்வை முன் வைக்கின்றனர். அவர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியர்கள் தாராள தேசியவாத கொள்கை உடையவர்களாகவே காணப்படுவர். 

ஆனால், இந்தியாவின் நிலைபாடு முற்றிலும் வேறுபட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அடிமைகளாக வாழ்ந்து, போராடி வெற்றி என்பதை அடைந்ததன் விளைவாக, இந்த தேசத்தால் பிறரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருபோதும் செயல்பட முடிவதில்லை. வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் இந்தியா, சர்வதேச நாடுகளின் வேற்றுமைகளிலும் ஒற்றுமை காணவே விரும்புகிறது. இப்படிப்பட்ட ஓர் நிலையை இந்தியா அடைவதற்கு அதன் வேறூன்றிய கலாச்சாரமே ஓர் காரணமாக அமைந்துள்ளது.

மேலும், பழமையும் பெருமையும் வாய்ந்த கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இழந்த ஓர் நாடு, அதை மீட்டெடுக்க என்ன செய்யுமோ அதற்கான முயற்சியில் தான் தற்போது இந்தியா ஈடுபட்டுள்ளது. இதில் ஒரு மதத்தை குறைத்தும், ஒரு மதத்தை தூக்கியும் நிறுத்த வேண்டிய எந்த அவசியமும் இங்கு யாருக்கும் இல்லை. இந்தியா என்ற நாகரீகம் எதை எல்லாம் இழந்ததோ அதை மீட்க வேண்டும் என்பது மட்டும் தான் தற்போதைய எண்ணமே தவிர, யாரையும் புண்படுத்தும் எண்ணம் யாருக்கும் இல்லை. இறுதியாக, இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறப்புடைய ஓர் ஜனநாயக நாடு. இதுவே இந்தியாவின் அழகு.

மேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 1!!

மேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 2!!

 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP