Logo

மதுரையில் தொடங்கியது சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநாடு!

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்தும் அகில பாரத மாநாடு மதுரையில் இன்று துவங்குகிறது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு, மதுரையில் உள்ள ஆர்.எல் கல்லூரியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
 | 

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்தும் 13வது அகில பாரத மாநாடு, மதுரையில் இன்று துவங்குகிறது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த மாநாடு, மதுரையில் உள்ள ஆர்.எல் கல்லூரியில் நடைபெறுகிறது. இன்று இந்த நிகழ்ச்சியை, தேசிய அமைப்பாளர் அருண் ஓஜா, தேசிய ஒருங்கிணைப்பாளர் காஷ்மீர் லால் முன்னிலையில், வாழும் கலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பாரதிய மஸ்தூர் சங், பாரதிய கிஸான் சங், ஏபிவிபி உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

மதுரையில் தொடங்கியது சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநாடு!

விவசாயம், நீர், ஆறுகள், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், சர்வதேச பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட உள்ளன. நாளை சுதேசி சந்தேஷ் யாத்திரை என்ற பெயரில், பேரணி  நடத்தப்படுகிறது. இந்த பேரணியில் நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகள் அணிந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்தப் பேரணியில் தமிழக பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே சிறப்புரையாற்றுகிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP