எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவைஸி!!!

அயோத்தியா வழத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், இந்திய சட்டத்திற்கு புறம்பாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்ததுடன், தனக்கு தன் மசூதி திரும்பவும் வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவைஸி.
 | 

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த, இந்து இஸ்லாமியர்களுக்கு இடையான அயோத்தியா வழக்கில், கடந்த 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். இதில், அயோத்தியாவில், முஸ்லிம்களுடைய பகுதி என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்கள் எவ்வகையான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இவ்வழக்கில், தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் குறிப்பிட்டுள்ளனர் நீதிபதிகள்.

இதன் அடிப்படையில், அயோத்தியாவின் சர்ச்சைகுரிய நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் குறித்த ஆவணங்கள் மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு.

இதை தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்திந்த ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவைஸி, அயோத்தியா வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு வெறும் நம்பிக்கையை வைத்து மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கும் நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பாக தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இஸ்லாமியர்கள் அயோத்தியாவின் நிலத்திற்காக சண்டையிடவில்லை எனவும் தங்களின் உரிமைகளுக்காக மட்டுமே போராடுவதாகவும் குறிப்பிட்டுள்ள ஒவாய்ஸி, மசூதியை இடித்துவிட்டே ராமர் சிலையை வைத்துள்ளது இந்துக்கள் என்பதால், சட்டப்படி தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் மசூதியை இடித்துவிட்டு எழுப்பபட்ட ராமர் கோவிலுக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது என்பதால், தனது மசூதி தனக்கு திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் அசாதுதின் ஒவைஸி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP