ஹெச்.ஐ.வி. இருப்பதாகக் கூறி பேராபத்தில் இருந்து தப்பிய பெண்!!

மகாராஷ்டிர மாநிலம், ஔரங்காபாத் அருகே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரிடம், தனக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாகக் கூறி பெண் ஒருவர் தப்பியுள்ளார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 | 

ஔரங்காபாத் அருகே வாலுஜ் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் இளம் வயது விதவை ஆவார். இவர் தனது பெண் குழந்தையுடன் கடந்த மாதம் 25-ஆம் தேதி, அருகில் உள்ள நகரத்தின் கடைவீதிகளுக்குச் சென்றார். பின்னர், வீடு திரும்ப நினைத்தபோது, கையில் வெறும் 10 ரூபாய் மட்டுமே இருந்ததால் ஷேர் ஆட்டோவில் ஏறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், வாகனத்தில் வரும் யாரிடமாவது உதவி கேட்கும் நோக்கத்தில் குழந்தையுடன் காத்திருந்தார்.

அப்போது 22 வயது இளைஞர் ஒருவர் பைக்கில் வந்தார். (குறிப்பு: கிசோர் என்னும் இவர், தனது தந்தையை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் இருப்பவர்). ஆனால், தனக்கான ஆபத்தை எதிர்பார்க்காத அந்தப் பெண், தனது குழந்தையுடன் இந்த இளைஞரின் பைக்கில் ஏறிச் சென்றார். அப்போது, திடீரென பாதையை மாற்றி பைக்கை ஓட்டிய அந்த இளைஞர், மறைவான ஒரு பகுதியில் அந்த பெண்ணை இறக்கி விட்டு, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியை தொடங்கினார்.

இந்த சமயத்தில் சமயோகிதமாக யோசித்த அந்தப் பெண், தனக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்தார். இதனால், அச்சமடைந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச்சென்றார். பிறகு, இதுகுறித்து காவல்நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். அவர் தெரிவித்த அடையாளங்களை வைத்து கிசோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP