லோக்பால் ஆணையத்தின் முதல் தலைவர் பதவியேற்றார்

லோக்பால் ஆணையத்தின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி பினாகி சந்திர கோஷ் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 | 

துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு லோக்பால் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதிகார வரம்பில் உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழல்கள் குறித்து  விசாரிப்பதற்காக லோக்பால் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையத்துக்கான உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

லோக்பால் ஆணையத் தலைவராக பதவியேற்றுள்ள பினாகி சந்திர கோஷ், தனது 70-ஆவது வயது வரை அப்பதவியில் நீடிப்பார். அவர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP