கும்பமேளாவில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனை!

கும்பமேளா விழா ஏற்பாட்டாளர்கள், பிரயாக்ராஜில் நேற்று ஒரே நேரத்தில் 500 பேருந்துகளை இயக்கிய நிகழ்வு, உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
 | 

கும்பமேளாவில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனை!

கும்பமேளா விழா ஏற்பாட்டாளர்கள், பிரயாக்ராஜில் நேற்று ஒரே நேரத்தில் 500 பேருந்துகளை இயக்கிய நிகழ்வு, உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கும்பமேளா விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.இந்த விழாவையொட்டி, கின்னஸ் சாதனை முயற்சியாக, பிரயாக்ராஜ் நகரில், கொல்கத்தா -டெல்லி தேசிய நெடுஞ்சாலையில், ஒரே நேரத்தில் நேற்று 500 பேருந்துகள் இயக்கப்பட்டன. 

கும்பமேளாவில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனை!

கும்பமேளா விழாவுக்கான இலச்சினையை தாங்கி, சுமார் 3.2 கி.மீ. தொலைவுக்கு பேருந்துகள் அணி வகுக்கப்பட்டு இயக்கப்பட்ட நிகழ்வு, உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, அபுதாபியில் நடைபெற்ற ஒரு அணிவகுப்பில் 390 பேருந்துகள் இயக்கப்பட்டது தான் இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP