‛வாயு’ புயல்: குஜராத்தில் ஹை அலர்ட்

குஜராத் மாநிலத்தில் வாயு புயல் நாளை காலை கரையை கடக்கவுள்ளதால், அங்குள்ள பல மாவட்டங்களுக்கு ஹை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கடலோர மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 | 

வல்சாட் மாவட்டத்தில், இரு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கட்ஜ் பகுதியிலும் ஆங்காங்கே சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், புயலால் பெரும் பாதிப்பை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில், என்.டி.ஆர்.எப்., எனப்படும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

‛வாயு’ புயல்: குஜராத்தில் ஹை அலர்ட்

தாழ்வான பகுதிகளில் வசிப்போர், வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கண்ட்லா துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் வசிப்போர் மற்றும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மீனவர்கள் கரைக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குஜராத்தில், இதுவரை இல்லாத வகையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP