Logo

அச்ரேக்கர் பெயரில் கல்வி நிறுவனம்: மகாராஷ்டிர விளையாட்டுத்துறை அமைச்சர்

மறைந்த அச்ரேக்கருக்கு உரிய மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்தவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அவர் பெயரில் கல்வி நிறுவனம் அமைக்க ஆலோசனை நடப்பதாக மகாராஷ்டிரா விளையாட்டுத்துறை அமைச்சர் வினோத் தவ்டெ தெரிவித்துள்ளார்.
 | 

அச்ரேக்கர் பெயரில் கல்வி நிறுவனம்: மகாராஷ்டிர விளையாட்டுத்துறை அமைச்சர்

மறைந்த அச்ரேக்கர் பெயரில் கல்வி நிறுவனம் அமைக்க ஆலோசனை நடப்பதாக மகாராஷ்டிரா விளையாட்டுத்துறை அமைச்சர் வினோத் தவ்டே தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் கடவுளாக திகழ்ந்த சச்சின் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்று,  டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் போன்ற பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

இவர் சிறுவனாக இருக்கும்போது ராமாகந்த் அச்ரேக்கர் என்ற பயிற்சியாளரிடம் கிரிக்கெட் பயிற்சி பெற்றார். இவர் குறித்து சச்சின் பல முறை பேசியுள்ளார். இவருக்கு மத்திய அரசின் துரோணாச்சாரியார் விருதையும் பெற்றுள்ளார். 87 வயதாகிய ராமாகந்த் அச்ரேக்கர் மும்பையில் நேற்று முன்தினம் காலமானார்.

அவருக்கு மாநில அரசு சார்பில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவர் பெயரில் கல்வி நிறுவனம் தொடங்க இருப்பதாக அந்த மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வினோத் தவ்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP