Logo

ஆதார் தொடர்பான புகார்களை ஆன்லைனில் எவ்வாறு தாக்கல் செய்வது என்பதை அறிவோமா ??

இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் (UIDAI), ஆதாரில் ஏற்படும் சிக்கல்கள் குறித்த புகார்களை அவர்களின் வலைதளம் மூலம் பதிவு செய்யும் முறையை தற்போது வெளியிட்டுள்ளது.
 | 

ஆதார் தொடர்பான புகார்களை ஆன்லைனில் எவ்வாறு தாக்கல் செய்வது என்பதை அறிவோமா ??

இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் (UIDAI), ஆதாரில் ஏற்படும் சிக்கல்கள் குறித்த புகார்களை அவர்களின் வலைதளம் மூலம் பதிவு செய்யும் முறையை தற்போது வெளியிட்டுள்ளது.

இன்றைய இந்தியாவில், ஆதார் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமாகும். 

இந்நிலையில், ஆதார் புகார்களை ஆன்லைனில் எவ்வாறு தாக்கல் செய்வது என்பதிற்கான சில வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளது இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையமான உதய்.

 1. www.uidai.gov.in என்ற வலைதளத்திற்கு சென்று, "தொடர்பு மற்றும் ஆதரவு" என்ற செயல்முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. அதன் பிறகு, "புகார் தாக்கல்" என்ற செயல்முறையை அழுத்தவும்.

3. இதை தொடர்ந்து திறக்கப்படும் ஓர் புது வலைதளப்பக்கத்தில், பெயர், முகவரி, பதிவு ஐடி, மொபைல் எண், நகர், ஊர், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் போன்ற விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

4. இதை தொடர்ந்து, கீழ்தோன்றும் மெனு மூலம், எத்தகைய புகார் என்பதை குறிக்கும் "புகார் வகை" ஐ தேர்ந்தெடுத்த பின்னர், கேப்ட்சா குறியீட்டை டைப் செய்து சமர்ப்பிக்கவும்.

இதை தொடர்ந்து, ஆன்லைனில் அளிக்கப்பட்டிருக்கும் புகார்களின் நிலையை அறிந்து கொள்ளும் வழிமுறையும் வழங்கியுள்ளது உதய். உதயின் வலைதளத்தில் இருக்கும் "தொடர்பு மற்றும் ஆதரவு" என்ற செயல்முறையை தேர்ந்தெடுத்து, அதனுள் கொடுக்கப்பட்டிருக்கும் "புகார் நிலை சரிப்பார்த்தல்" என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்களின் புகாரின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளலாம். 

குறிப்பாக, ஆதார் புதுப்பித்தல் தொடர்பான புகார்கள், ஆதாரில் ஏற்படும் சிக்கல்கள் குறித்த புகார்கள், ஆதார் விண்ணப்பித்திருந்தும் அதை பெறுவதில் தாமதம் போன்ற புகார்கள் அல்லாத வேறு புகார்களுக்கு "1947" என்ற கட்டணமற்ற தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுக்குமாறு இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் கூறியுள்ளது. 

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP