பாஸ்போர்ட் அலுவலக அறிவிப்பில் சதி - மேதா பட்கர் குற்றச்சாட்டு!!!

மத்திய பிரதேசம் : நர்மதா பச்சாவ் அந்தோலன் ஆர்வலரான மேதா பட்கர் மீது 9 வழக்குகள் உள்ளதாக கூறி அவரத பாஸ்போர்டிற்கு தடை விதிப்பது குறித்து மும்பை பாஸ்போர்ட் அலுவலகம் அனுப்பியிருந்ததை தொடர்ந்து, அதன் நோட்டீஸுக்கு பின்புலத்தில் சதி உள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் மேதா பட்கர்.
 | 

மேதா பட்கர் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவரை குறித்த அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க தவறியதற்காக இவரது பாஸ்போர்டை ஏன் தடை செய்யக்கூடாது என்று விளக்கமளிக்குமாறு ஆர்வலர் மேதா பட்கருக்கு அனுப்பியிருந்த நோட்டீஸிற்கு பதிலளித்துள்ள மேதா, இவர்களின் நோட்டீஸுக்கு பின்னால் சதி இருப்பதாக கூறியுள்ளார். தன் மீது உள்ள 9 வழக்குகள், மத்திய பிரதேச மாநிலத்தின் பர்வானி, அலிராஜ்பூர் மற்றும் காந்த்வா மாவட்டங்களில் உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 3 வழக்குகளில் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தன் போன்ற ஆர்வலர்கள் மீது ஏதாவது ஒரு குற்றத்தை சுமத்தி சிறையில் வைக்க வேண்டும் என்பதே சிலரின் நோக்கமாக உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு எதற்காக விவரங்கள் அளிக்க வேண்டும் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார் மேதா பட்கர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP