அயோத்தி வழக்கு விசாரணை ஜனவரியில் தொடங்கும்: உச்சநீதிமன்றம்

அயோத்தி வழக்கு விசாரணை வரும் 2019 ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தினந்தோறும் விசாரிக்கப்படுமா என்பது குறித்து அப்போது முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

அயோத்தி வழக்கு விசாரணை ஜனவரியில் தொடங்கும்: உச்சநீதிமன்றம்

அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை 2019 ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி, யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் இவ்வழக்கை விசாரித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு, மாற்ற வேண்டிய அவசியமில்லை, என்று கூறியது. 

மேலும், மசூதிக்கு சென்று தொழுகை செய்வது, முஸ்லீம் மதத்தின் ஒருங்கிணைந்த முறையா, என்பதை பெரிய அளவில் விவாதிக்க வேண்டியது அவசியம் இல்லை, என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அக்டோபர் 29ம் தேதி இந்த வழக்கை, புதிய அமர்வு விசாரிக்கும் என்றும் கூறியிருந்தது. அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப், ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு வந்தது. 

இதனையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணை அடுத்தாண்டு(2019) ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கு விசாரணை தினந்தோறும் நடக்குமா என்பது குறித்து ஜனவரியில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP