Logo

மதுபோதையில் விமானத்தை இயக்கிய விமானிக்கு 3 ஆண்டு தடை

மது போதை தொடர்பான பரிசோதனை செய்யாமல் விமானத்திற்கு சென்ற விமானியை பிடிக்க, விமானம் உடனடியாக தரையிறக்கம்: விதியை மீறி மதுபோதையில் விமானம் இயக்கியதால் விமானம் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

மதுபோதையில் விமானத்தை இயக்கிய விமானிக்கு 3 ஆண்டு தடை

மதுபோதையில் விமானத்தை இயக்கிய ஏர் இந்தியா விமானிக்கு 3 ஆண்டுகள் விமானம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து பாங்காங் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், துணை விமானியாக இருந்த கேப்டன் அரவிந்த் கத்பாலியா, மது போதை தொடர்பான பரிசோதனை செய்யாமல் விமானத்திற்கு சென்றுள்ளார். இதனை கண்டுபிடித்த அதிகாரிகள், புறப்பட்டு சென்ற விமானத்தை உடனடியாக தரையிறக்குமாறு உத்தரவிட்டனர்.  இதையடுத்து டெல்லியில் விமானம் தரையிறங்கியதும், அரவிந்த் கத்பாலியாவிடம் சோதனை நடத்தப்பட்டது.  இதில், அவர் மதுபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, விதியை மீறி மது அருந்திவிட்டு விமானம் இயக்கியதற்காக 3 ஆண்டுகள் விமானம் ஓட்ட தடை விதித்து, உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் இன்று உத்தரவிட்டுள்ளது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP