சில்லரைகள் கொண்டு வாகனம் வாங்கிய இளைஞர்!!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த குப்தா தான் பல வருடங்களாக சேமித்து வந்த சில்லரைகள் மூலம் 83,000 ரூபாய் மதிப்புள்ள ஹோன்டா ஆக்டிவா 125 வாகனத்தை வாங்கியுள்ளார்.
 | 

சில்லரைகள் கொண்டு வாகனம் வாங்கிய இளைஞர்!!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த குப்தா தான் பல வருடங்களாக சேமித்து வந்த சில்லரைகள் மூலம் 83,000 ரூபாய் மதிப்புள்ள ஹோன்டா ஆக்டிவா 125 வாகனத்தை வாங்கியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சத்னா நகரை சேர்ந்த ராகேஷ் குப்தா, கிருஷ்ணா ஹோண்டா ஷோரூமிற்கு, 4 மூட்டைகள் நிறைய சில்லரைகளுடன் சென்றுள்ளார். மூட்டைகளுடன் ஆட்டோவில் வந்து இறங்கிய அவரை கண்ட கடை முதலாளி ஆச்சிரியம் அடைந்த போதிலும், தீபாவளி அன்று வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன், தான் பல நாள் சேமித்த சில்லரைகளுடன் வந்திருக்கும் குப்தாவை ஏமாற்ற மனமில்லாமல், அவரும், கடை வேலையாட்கள் பலரும் சேர்ந்து பல மணி நேரம் செலவு செய்து அந்த சில்லரைகளை எண்ணியுள்ளனர்.

"வண்டி வாங்க வேண்டும் என்ற கனவை, என் பல வருட சேமிப்பு நிறைவேற்றியுள்ளது, இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்" என்று மகிழ்வுடன் கூறியுள்ளார், தன் சில்லரை சேமிப்பு மூலம் வண்டி வாங்கிய ராகேஷ் குப்தா.

ராஜஸ்தான் மாநிலத்தில், குளிர்சாதன பெட்டி வாங்க வேண்டும் என்ற தனது தாயின் நெடுநாள் ஆசையை, தன் 12 வருட சிறு சேமிப்பின் மூலம் நினைவாக்கிய 17 வயது சிறுவன் ராம் சிங்கும் சரி, தற்போது சில்லரைகளாக சேமித்து வண்டி வாங்கிய ராகேஷ் குப்தாவும் சரி, சிறுசேமிப்பின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்துகின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP