சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு அனுமதி? கேரள அரசு ஆலோசனை!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக விண்ணப்பித்துள்ள 36 பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கலாமா? என்பது குறித்து கேரள அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
 | 

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் தீர்ப்பு வரும் வரை ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் நீதிமன்ற தீர்ப்பின் படி பெண்கள் தரிசனத்திற்கு உரிமையுள்ளது. ஆனால் பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், பெண்களை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டுடன் கேரளா அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த சீசனில் ஐய்யப்பனை தரிசனம் செய்ய 36 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP