இதற்கு கூடவா ஒரு முன்னாள் முதல்வர் எதிர்ப்பு தெரிவிப்பார்?!

ஜமாத் -ஏ - இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
 | 

இதற்கு கூடவா ஒரு முன்னாள் முதல்வர் எதிர்ப்பு தெரிவிப்பார்?!

பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, ஜமாத் -ஏ - இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவருமான மெகபூபா முஃப்தி தலைமையில், அக்கட்சியினர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு -காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத் -ஏ- இஸ்லாமி என்ற அமைப்பு, பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக் கூறி, அந்த அமைப்புக்கு தடைவிதிக்கப்படுவதாக, மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

அதனையடுத்து, ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள  ஜமாத் -ஏ -இஸ்லாமி அமைப்பின் அலுவலகங்களுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒடுக்குமுறையை கையாளும் நோக்கத்துடன் ஜமாத் -ஏ -இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது எனக் கூறி, மெகபூபா முஃப்தி தலைமையில் பிடிபி கட்சியினர், மாநிலத் தலைநகரான ஸ்ரீநகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, மெகபூபா முஃப்தி  நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " கருத்து மோதல்களின் களம்தான் ஜனநாயகம். காஷ்மீரில் நிலவிவரும் அரசியல் சூழ்நிலையை மத்திய அரசு எவ்வாறு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது என்பதற்கு இந்தத் தடை ஒரு உதாரணம்" என அவர் தெரிவித்திருந்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP