உத்தரகண்ட்: கார் விபத்தில் பாஜக எம்பி காயம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக எம்.பி தீரத் சிங் ராவத் படுகாயமடைந்தார்.
 | 

உத்தரகண்ட்: கார் விபத்தில் பாஜக எம்பி காயம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக எம்.பி தீரத் சிங் ராவத் படுகாயமடைந்தார். 

உத்தரகாண்ட் மாநிலம், கர்வால் தொகுதி எம்.பி தீரத் சிங் ராவத் இன்று காரில் பிம்கோடா - பந்த் டீப் அருகே வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தீரத் சிங் ராவத் காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்களை அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹரித்வாரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP