உத்தரப்பிரதேசம்: ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன; 5 பேர் படுகாயம் !

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் டெல்லி செல்லும் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
 | 

கொல்கத்தாவின் ஹவுர நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி சென்ற விரைவு ரெயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் உத்தரப்பிரதேசம் கான்பூரை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் அடைந்தது.  அப்போது ரெயிலின் 10 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.  தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்த 5 பயணிகளை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP