உ.பி. மருத்துவரின் அலட்சியம்: பிறந்து 4 நாளான குழந்தை உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவரின் அலட்சியமான அணுகுமுறையால் பிறந்து நான்கு நாளே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து அந்த மருத்துவர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டார்.
 | 

உத்தரப்பிரதேச மாநிலம் பெரைலி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிறந்த நான்கே நாட்களான பெண் குழந்தையை அதன் பெற்றோர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தனர்.

குழந்தை ஒரு நாளாக பால் குடிக்கவில்லை என்றும் காய்ச்சல் இருப்பதாகவும் மருத்துவரிடம் தெரிவித்தனர். அதற்கு மருத்துவர் இது ஆண்கள் பிரிவு, நீங்கள் பெண்கள் பிரிவுக்கு கொண்டு சென்று குழந்தையை காட்டுங்கள் என கூறியுள்ளார்.

உடனே பெற்றோர் பெண்கள் பிரிவுக்கு சென்று குழந்தையை காண்பித்துள்ளனர். அப்போது அங்கிருந்த மருத்துவர் மீண்டும் ஆண்கள் பிரிவுக்கு அனுப்பியுள்ளார். இப்படியே மூன்று மணி நேரம் பெற்றேரர் அலைகழிக்கப்பட்டுள்ளனர்.

இறுதியில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் அது உயிரிழந்தது. இது குறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் பெற்றோரையும் குழந்தையும் அலைகழித்தது உறுதியானது. இதையடுத்து அந்த மருத்துவரை பணிஇடை நீக்கம் செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP