இணையத்தின் மூலம் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக இளம் பெண் புகார் அளித்துள்ளார்.

20 வயதான அங்கிதா சுக்லா என்ற பெண், தன்னை சமூக வலைதளப் பக்கத்தில் ஆயுஷ் வேதந்த் என்பவரும், அவருடைய நண்பர்களும் அனுப்பிய பல அச்சுறுத்தும் செய்திகள், மோசமான கருத்துக்கள் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவிட்டுள்ளார்.
 | 

இணையத்தின் மூலம் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக இளம் பெண்

20 வயதான அங்கிதா சுக்லா என்ற பெண், தன்னை சமூக வலைதளப் பக்கத்தில்  ஆயுஷ் வேதந்த் என்பவரும், அவருடைய நண்பர்களும் அனுப்பிய பல அச்சுறுத்தும் செய்திகள், மோசமான கருத்துக்கள் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவிட்டுள்ளார். 

சமூகவலைத்தளங்கள் பல நேரங்களில் பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்கிவிடுவதோடு,  அதற்கான தீர்வையும் சமூக வலைத்தளமே தந்தி விடுகிறது. என்பதற்கான  உதாரணமாக ஒரு பெண்ணின் வித்யாசமான பாலியல் புகாருடனான பதிவு வைரலாகி வருகிறது.  

அந்த பதிவில் 20 வயதான அங்கிதா சுக்லா என்ற இளம்பெண் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஆயுஷ் வேதாந்த், குன்வார் அன்மோல், ஸ்ரீகாந்த் ரத்தோர் உள்ளிட்டவர்கள் ஆபாசமான வார்த்தைகள்,  போஸ்ட்கள் மூலம் தன்னை ஆன்லைன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும்.

இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் . இந்த துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு அந்த நபர்களின் ஆபாச பதிவுகளையும் ட்வீட்டர் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.

இந்த ட்வீட்டர் பதிவு வைராக்கி வருகிறது. இதற்கிடையே இந்த பதிவை பார்த்த   தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் இந்த  புகார் குறித்து  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக  அந்த இளம் பெண் மற்றோரு பதிவில் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP