Logo

ஸ்ரீ நகரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்!!!

ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறைந்திருந்ததை தொடர்ந்து, அதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு கட்டுபாடுகளை, மத்திய அரசு, ஒவ்வொன்றாக நீக்கி வரும் நிலையில், மீண்டும் நடத்தப்பட்டுள்ள ஓர் பயங்கரவாத தாக்குதலினால் அதிர்ச்சியடைந்துள்ளனர் காஷ்மீர் மக்கள்.
 | 

ஜம்மு காஷ்மீர் பகுதியில், பயங்கரவாதிகளின் ஊடுருவல்களும், தாக்குதல்களும் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்ததை தொடர்ந்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

இந்நிலையில், தற்போது தாக்குதல்கள் குறைந்து, ஜம்மு காஷ்மீர் பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருவதால், அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும், மத்திய அரசு, ஒவ்வொன்றாக நீக்கி வந்தது. இதனிடையில், காஷ்மீர் மாநிலத் தலைநகர் , ஸ்ரீ நகரில் உள்ள ஹரி சிங் சந்தை பகுதியில், பயங்கரவாதிகளால் திடீரென வீசப்பட்ட வெடியினால், பொது மக்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். எனினும், பெரிய அளவு சேதாரங்கள் ஏற்படவில்லை என்று காஷ்மீர் போலீசார் கூறியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் முதல், இந்தியாவின், ஜம்மு காஷ்மீர் பகுதியில், வெளிமாநில மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதித்திருந்தது மத்திய அரசு. மேலும், மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, இயல்பு நிலை திரும்பி வருவதால், அப்பகுதியில், சுற்றுலா மேற்கொள்ளவும், மொபைல் சேவையை தொடரவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP