பேருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு.... தீவிரவாதி கைது!

ஜம்மு பேருந்து நிலையத்தில் நேற்று நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு காரணமாக சந்தேகிப்படும் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவனை ஜம்மு -காஷ்மீர் மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.
 | 

ஜம்மு -காஷ்மீர் மாநிலத் தலைநகரான ஜம்முவில், பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் நிகழ்த்தப்பட்ட கையெறிகுண்டு தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து ஜம்மு- காஷ்மீர் மாநில போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் சம்பவ இடத்திலிருந்த சாட்சியகங்கள் அளித்த தகவல்களின் படியும், பேருந்து நிலையத்தின் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்தும், இத்தாக்குதலை நடத்தியவனாக சந்திக்கப்படும் நபரை கைது செய்தனர்.

குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபரின் பெயர் யாசின் பட் என்றும், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் கட்டளைப்படியே அவன் இந்தத்  தாக்குதலை நடத்தியுள்ளான் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP