ஜார்க்கண்ட் மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு!!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் குறித்த விபரங்களை இன்று அறிவித்துள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.
 | 

ஜார்க்கண்ட் மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு!!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் குறித்த விபரங்களை இன்று அறிவித்துள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

ஜார்க்கண்ட் மாநில ரகுபர்தாஸ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வரும் ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 23 வரை 5 கட்டமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

இந்த தேர்தலுக்கான முதல் கட்டம் நவம்பர் 30 அன்று தொடங்கவுள்ள நிலையில், இரண்டாவது கட்டம் டிசம்பர் 7 அன்றும், மூன்றாவது கட்டம் டிசம்பர் 12 அன்றும், நான்காவது கட்டம் டிசம்பர் 16 அன்றும், ஐந்தாவது கட்டம் டிசம்பர் 20 அன்று நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் 23 ஆம் தேதியுடன் தேர்தல் முற்றிலுமாக முடிவடைகிறது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகளும் அமல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் தலைமை தேர்தல் ஆணையர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP