ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க பரிந்துரை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலில் இருந்து வரும் குடியரசுத்தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பரிந்துரை செய்துள்ளார்.
 | 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க பரிந்துரை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பரிந்துறை செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அந்த மாநிலத்தில் அமலில் உள்ள குடியரசுத்தலைவர் ஆட்சியின் காலம் முடிவுக்கு வர உள்ள நிலையில் இதுகுறித்து மக்களவையில்  இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஜம்மு-காஷமீர் மாநிலத்தில்  அமைதியை நிலைநாட்டிட மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

மேலும், அங்குள்ள ஒவ்வொருரின் உயிரும் விலை மதிக்க முடியாதவை. மேலும் எல்லைக்கட்டுபாட்டு கோடு பகுதியில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு விஷயங்களில் மத்திய அரசு சமரசம் மேற்கொள்ளாமல் பணியாற்றி வருகிறது.

தேர்தல் நடத்துவது குறித்து  அமர்நாத் யாத்திரை காலம் முடிந்த பின் முடிவெடுக்கப்படும். எனவே அதுவரை குடியரசுத்தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான தீர்மானத்தை பரிந்துரைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதனடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி இன்னும் 6 மாத காலங்களுக்கு நீடிக்க பரிந்துரை செய்கிறேன் என்று அறிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP