அரசியல் நெருக்கடியால் மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்துள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் நெருக்கடியை தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பாண்மை எந்த கட்சியாலும் நிரூபிக்கப்படாத நிலையில், குடியரசுத் தலைவரின் ஆட்சி தற்போது அமல்படுத்தபட்டுள்ளது.
 | 

அரசியல் நெருக்கடியால் மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்துள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் நெருக்கடியை தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பாண்மை எந்த கட்சியாலும் நிரூபிக்கப்படாத நிலையில், குடியரசுத் தலைவரின் ஆட்சி தற்போது அமல்படுத்தபட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளிடிடப்பட்டது. இதை தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்றிருந்த கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா-சிவசேனா கட்சிக்களுக்கிடையே முதலமைச்சர் பதவியில் யார் அமர்வது என்பது குறித்த கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவி வந்தது. 

மகாராஷ்டிராவில் முன்னிலை வகுக்கும் பாஜகவோ, ஏற்கனவே முதலமைச்சர் பதிவியை வகித்து வந்த தேவேந்திர ஃபட்னாவிஸின் பெயரை முன்வைக்க, கூட்டணியான சிவசேனாவோ, அதன் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே பெயரை பரிந்துரை செய்தது. மேலும், ஆட்சியை 2.5 ஆண்டுகளாக பிரித்து கொள்ளலாம் என்ற கருத்தையும் முன்வைத்தது.

ஆனால், இதற்கு சம்மதம் தெரிவிக்காத பாஜகவின் மீது அதிருப்தியடைந்த சிவசேனா, தேர்தலுக்கு முன்னரே இதை குறித்து அமித் ஷாவுடன் உரையாடியதென்றும், அவரின் சம்மதத்திற்கு பின்னர் தான் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டதாகவும் கூறியது சிவசேனா. ஆனால் அதற்கு பாஜக முற்றிலும் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்குமிடையேயான இடைவெளி அதிகரித்து கொண்டே சென்றது.

இதனிடையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் ஒப்படைத்தார். எனினும், அவரை அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பாண்மையை நிரூபிக்குமாறு எழுந்த ஆளுநரின் கோரிக்கையை தொடர்ந்து, ஆட்சி அமைக்க 105 இடங்களை பிடித்திருந்த பாஜகவிற்கு இன்னும் 45 இடங்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் பெரும்பாண்மையை நிரூபிக்க இயலாமல் எதிர்கட்சி இருக்கையில் அமர தயாராகிவிட்டது. 

பாஜகவை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைக்க தீர்மானித்த சிவசேனாவால், கொடுக்கப்பட்டிருந்த நேரத்திற்குள் பெரும்பாண்மையை நிரூபிக்க இயலாததை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன், அம்மாநிலத்தில் இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 

இதனிடையில், குறிப்பட்ட நேரத்திற்குள் ஆதரவை பெற இயலாததால் கூடுதலாக 3 நாட்கள் வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்த சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே, அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP