பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: போலீஸார் இருவர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் போலீஸார் இருவர் கொல்லப்பட்டனர்.
 | 

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: போலீஸார் இருவர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில்  போலீஸார் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவுடன் சமாதானத்தையே விரும்புவதாக பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வந்தாலும், ஜம்மு -காஷ்மீரில் இருநாட்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

குப்வாரா மாவட்டத்துக்குட்பட்ட  பகுதியில் நேற்று நள்ளிரவு, பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்கியதில் இரண்டு போலீஸார் பலியாகினர். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படையினர் இருவர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தனர். 

பூஞ்ச் பகுதியில்: இதேபோன்று, பூஞ்ச் மாவட்டத்துகுட்பட்ட காதி பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP