200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம் : 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தனியார் வாகனம் ஒன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம் : 3 பேர் பலி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தனியார் வாகனம் ஒன்று 200 அடி பள்ளத்தில் தலைக்கீழாக கவிழ்ந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், சீன்பாத்தி என்ற இடத்தில் இன்று காலை தனியார் வாகனம் ஒன்று 8 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் அருகில் இருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP