Logo

ஒடிசா: 75க்கும் அதிகமான புலிகள் உயிரிழப்பு!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் வனப்பகுதியில் அமைந்து உள்ள புலிகள் காப்பகத்தில் கடந்த 10 வருடங்களாக சுமார் 75 க்கும் அதிகமான புலிகள் இறந்துவிட்டதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. தற்போது 28 புலிகள் மட்டுமே உள்ளதாக தெரியவந்துள்ளது
 | 

ஒடிசா: 75க்கும் அதிகமான புலிகள் உயிரிழப்பு!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் வனப்பகுதியில் அமைந்து உள்ள புலிகள் காப்பகத்தில் கடந்த 10 வருடங்களாக சுமார் 75 க்கும் அதிகமான புலிகள் இறந்துவிட்டதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் வனப்பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு உள்ள காப்பகத்தில் புலிகளைப் பராமரிக்க மத்திய அரசு கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நடந்த கணக்கெடுப்பில் இங்கு வெறும் 28 புலிகள் மட்டுமே மிஞ்சி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2006ம் ஆண்டின் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 106 ஆக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேலும் சில புலிகள் இறந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP