உத்தரப்பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் எந்த கலவரமும் நடக்கவில்லை- முதல்வர்

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் எந்த கலவரமும் நடக்கவில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.
 | 

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 321 இடங்களை பிடித்து அறுதிபெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்தது. யோகி ஆதித்யாநாத் அம்மாநில முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில முதல்வர் யோகி ஆதித்யா நாத் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர்,  "பாஜக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதன் பிறகு சிறிய கலவரம் கூட இங்கு நடந்ததில்லை. குற்றங்களையும், குற்றவாளிகளையும் எங்கள் அரசு கொஞ்சம் கூட சகித்துக் கொண்டதில்லை. இதனால் இங்கு குற்றங்கள் குறைந்துவிட்டது" என்றார்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP