அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு..

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19,06,657 பேர் சேர்க்கப்படவில்லை. மொத்தம் 3.11 கோடி பேர் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
 | 

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு..

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண இந்த குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) உருவாக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19,06,657 பேர் சேர்க்கப்படவில்லை. மொத்தம் 3.11 கோடி பேர் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

இறுதிபட்டியலில் இடம் பெறாதோர் இந்திய குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தில் புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2018 ஜூலை 30 வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டிருந்த நிலையில் தற்போது பாதியாக குறைந்துள்ளது. 

பலரது பெயர்கள்விடுபட்டிருப்பதால் அசாம் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP