என் மகன் சாகட்டும் : ரியாஸ் அபுபக்கரின் தந்தை ஆவேசம்

என் மகன் பயங்கரவாதி என்று நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம், எங்கள் குடும்பம் எந்த வித உதவியையும் செய்யாது என்று கேரளாவில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரின் தந்தை தெரிவித்துள்ளார்.
 | 

என் மகன் சாகட்டும் : ரியாஸ் அபுபக்கரின் தந்தை ஆவேசம்

"என் மகன் பயங்கரவாதி என்று நிரூபிக்கப்பட்டால், அவனுக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம், எங்கள் குடும்பம் எந்த வித உதவியையும் செய்யாது" என்று கேரளாவில் கைது செய்யப்பட்ட, ரியாஸ் அபுபக்கரின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக, காசர்கோட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் தேசிய புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள, ரியாசின் தந்தை, தனது மகன் பயங்கரவாதி என்பது நிரூபமானால் அவனுக்கு எந்த தண்டனையும் கொடுங்கள், எங்கள் குடும்பம் அவனுக்கு உதவி செய்யாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 3 வருடங்களாக ரியாசின் இயல்பு வாழ்க்கை மாறியது என்றும், அவன் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விட்டு, இஸ்லாம் சம்பந்தப்பட்ட இணைய தள செய்திகளை, தன்னுடைய மொபைல் மூலம் பார்த்து வந்ததாக தெரிவித்துள்ளார். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP