Logo

உ.பி அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ராஜ்பர் நீக்கம்

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஓம் பிரகாஷ் ரா ஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ராம்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
 | 

உ.பி அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ராஜ்பர் நீக்கம்

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ராம்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதே மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். இவர் சுகல்தேவ் பாரதிய சமாஜ் வாதி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 

பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்த இவர், கடந்த சில மாதங்களாக பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து வந்தார்.

இதையடுத்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க உத்தரவிடும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆளுருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் பேரில் ஆளுநர் ராம் நாயக் இன்று  ஓம் பிரகாஷ் ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP