புல்வாமாவில்  துப்பாக்கிச் சூடு...தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதியை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
 | 

புல்வாமாவில்  துப்பாக்கிச் சூடு...தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதியை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா -பாகிஸ்தான் எல்லையோர மாவட்டங்களில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

இதேபோன்று, இப்பகுதிகளில் தீவிரவாதிகளின் தாக்குதலும், அதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுப்பதும் தொடர் நிகழ்வாக தான் இருக்கிறது. 

இந்த நிலையில், புல்வாமா மற்றும் ட்ரால் பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்தச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்வாமாவில் கடந்த மாதம் 14 -ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP