மனாேகர் பாரிக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
 | 

மனாேகர் பாரிக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் அரசு முழு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கணைய புற்றுநோயால் நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்த கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், நேற்றிரவு காலமானார். பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் கோவா சென்று மனோகர் பாரிக்கரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பிகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உள்பட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து தலைநகர் பனாஜியில் உள்ள மிராமர் கடற்கரையில் இன்று மாலை 5 மணியளவில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் மனோகர் பாரிக்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP