மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 | 

மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் அரியானா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜக 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

இதேபோல் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 147 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களிலும் களம் காண்கின்றன. இதுதவிர ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் சேனா, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

இருமாநிலங்களில் பதியப்படும் வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP