மகாராஷ்டிரம்: 17 வயது மகளை எரித்து கொன்ற தந்தை

தனது பேச்சை கேட்காத மகள் மீதுஆத்திரம் அடைந்த, பாண்டூரங் ஷ்ரேரங் சாகுண்டே, அவரது மகளை கொலை செய்து, பெண்ணின் தாய்வழி மாமாக்களின் உதவியுடன் உடலை எரித்ததாக கூறப்படுகிறது.
 | 

மகாராஷ்டிரம்: 17 வயது மகளை எரித்து கொன்ற தந்தை

 மகாராஷ்டிராவில் உள்ள  அஹ்மத்நகரில் 17 வயது சிறுமியை , அவரது தந்தையே கொலை செய்த சம்பவம் நிகழந்துள்ளது.

அஹ்மத்நகரில் வசித்து வருபவர் பாண்டூரங் ஷ்ரேரங் சாகுண்டே, அவரது மகள் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த நிலையில், ஆண் நண்பர் ஒருவறுடன் பழகி வந்துள்ளார்.  இதனை பாண்டூரங் ஷ்ரேரங் சாகுண்டே கண்டித்துள்ளார். 

அதையும் மீறி சாகுண்டேவின் மகள் ஆண் நண்பருடனான நட்பைத் தொடர்ந்துள்ளார். தனது பேச்சை கேட்காத மகள் மீதுஆத்திரம் அடைந்த, பாண்டூரங் ஷ்ரேரங் சாகுண்டே, அவரது மகளை  கொலை செய்து, பெண்ணின்  தாய்வழி மாமாக்களின் உதவியுடன் உடலை எரித்து விட முயற்சித்துள்ளார். 

இந்நிலையில்  இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அஹ்மத் நகர் போலீசார், அங்கிருந்து பாதி எரிக்கப்பட்ட நிலையில் இருந்து பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் நோக்கில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பெண்ணின் உடலை எரிக்க முயன்ற பாண்டூரங் ஷ்ரேரங் சாகுண்டே மற்றும் அவரது உறவினர்கள் மீது, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP