உள்ளாட்சித்தேர்தல் : ஜம்முவில் படிப்படியாக தடைகள் விலக்கம்

ஜம்முவில் உள்ளாட்சித்தேர்தல் நடக்கவிருப்பதை தொடர்ந்து, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 | 

உள்ளாட்சித்தேர்தல் : ஜம்முவில் படிப்படியாக தடைகள் விலக்கம்

ஜம்முவில் உள்ளாட்சித்தேர்தல் நடக்கவிருப்பதை தொடர்ந்து, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்முவில் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடக்கவுள்ளதை தொடர்ந்து, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சி தலைவர்கள் விடுவிக்கப்பட்டு, தேர்தலுக்கான வேலைகளை அவர்கள் தொடங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, பொது பாதுகாப்பிற்காகவும், சட்ட ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், சௌத்ரி லால் சிங், ராமன் பல்லா, ஃபிர்டஸ் தாக், சுர்ஜித் சிங் ஸ்லாத்தியா, அப்துல் மஜீத் வானி, ஹர்ஷ் தேவ் சிங் உட்பட பல தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்கும்படி மத்திய அரசு உத்திரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்முவின் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஹர்ஷ் தேவ் சிங் கூறுகையில், "மூவண்ண கொடிக்கு மரியாதை கொடுக்கும் எங்களை 58 நாட்கள் வீட்டுக்காவலில் வைத்திருந்தது சற்று வருத்தமாக உள்ளது. இது ஜனநாயக கொள்கைக்கு எதிரானதாகவே எனக்கு தோன்றுகிறது" எனக் கூறினார்.

ஃபிர்டஸ் தாக் கூறுகையில், "காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் யாரும் விடுவிக்கப்படாத நிலையில், இந்த எதிர்கட்சி தலைவர்களின் விடுவிப்பு வெறும் மேல் பூசாகவே இருக்கக்கூடும். தேர்தல் சமயத்தில் நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை என்று மத்திய அரசு மக்களுக்கு காட்ட விழைகிறது போலும்" என்று கூறியுள்ளார்.

தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் தேவேந்திர சிங் ரானா, "நான் சென்று முதலில் மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்த வேணடும். அதன் பின்தான் தேர்தல் குறித்து ஆலோசிக்க வேண்டும்" என கூரியுள்ளார்.

இதனிடையில், கடந்த புதனன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த பஜக கட்சியின் செயலாளர் ராம் மாதவ், "காஷ்மீர் மக்கள், இந்தியா என்னும் மாபெரும் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே கருதப்படுகின்றனர். நமது பிரதமர் இப்போது ஜம்மு காஷ்மீருக்காக எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும், அங்குள்ள மக்களின் நிலையை மேம்படுத்துவதற்காகவே என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP