Logo

காங்கிரசிடம் வலியப்போய் அவமானப்பட்ட கெஜ்ரிவால்!

வரும் மக்களவைத் தேர்தலில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 | 

காங்கிரசிடம் வலியப்போய் அவமானப்பட்ட கெஜ்ரிவால்!

மக்களவைத் தேர்தலில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளும் தற்போது பாஜக வசமே உள்ளன. இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், டெல்லி மற்றும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயார் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் அறைக்கூவல் விடுத்தார்.

ஆனால் அவரது கோரிக்கைக்கு காங்கிரஸ் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து, டெல்லியில் மொத்தமுள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில், ஆறு தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி நேற்று முன்தினம் வேட்பாளர்களை அறிவித்தது.

இருப்பினும், கூட்டணி வைத்துக் கொள்ளவதாக இருந்தால், டெல்லியில் 2 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க தயாராக இருப்பதாக  ஆம் ஆத்மி ஆசை வார்த்தை காட்டியது.

இதையடுத்து, அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட தலைவர்களுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதில், காங்கிரஸ் தனித்து நின்றாலும் வெற்றிப்பெற வாய்ப்புள்ளதாகவும், எனவே, ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்றும் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராகுலிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி தலைநகர் டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி, தற்போது தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, காங்கிரஸுடன்  கைக்கோர்க்க  முயற்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

ஆம் ஆத்மியின் விபரீதமான இந்த முயற்சியை டெல்லிவாசிகள் எப்படி பார்க்கின்றனர் என்பது மக்களவைத் தேர்தல் முடிவில் தெரிந்துவிடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP