காஷ்மீர்- ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி கைது

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முக்கிய தளபதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவனிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
 | 

காஷ்மீர்-   ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி கைது

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்‌பை சேர்ந்த முக்கிய தளபதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.


காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பண்டிப்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அ‌ப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய நபரை பாதுகாப்பு படையினர் நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில் அந்த நபர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி என்றும் அவனது பெயர் சர்ப்ராஸ் அகமது என தெரியவந்தது. மேலும் அவனிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

இவன் கடந்த 5 வருடங்களாக குப்வாரா, சபோர், பண்டிப்புரா மாவட்டங்களில் நடந்த தாக்குலில் முக்கிய தளபதியாக ஈடுபட்டுவந்துள்ளான் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP