கர்நாடகா கனமழை: பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடியூரப்பா நேரில் ஆய்வு!

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேரில் பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டார்.
 | 

கர்நாடகாவில் கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. ஏராளமான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் அழிந்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. 

நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP