கர்நாடகம் : இன்னைக்காவது அது நடக்குமான்னு டவுட் தான்!

பாஜகவைச் சேர்ந்த சுனில் குமார், பசவராஜ் பொம்மை, சிடி ரவி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த சா ரா மகேஷ், ஹெச்டி ரிவணா, பண்டிபா காஷம்பூர் ஆகியோருடன், தமது அறையில் சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 | 

கர்நாடகம் : இன்னைக்காவது அது நடக்குமான்னு டவுட் தான்!

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை எப்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதையடுத்து, அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக 6: 20 மணிக்கு, சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் அறிவித்திருந்தார்.

10 நிமிடங்கள் கழித்து அவை மீண்டும் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவைச் சேர்ந்த சுனில் குமார், பசவராஜ் பொம்மை, சிடி ரவி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த சா ரா மகேஷ், ஹெச்டி ரிவணா, பண்டிபா காஷம்பூர் ஆகியோருடன், தமது அறையில் சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதையடுத்து, முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசின் மீது இன்றைக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பது சந்தேகம் தான் எனத் தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP