Logo

10 நிமிட தாமதத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

சற்று தாமதமாக வீடு திரும்பிய காரணத்துக்காக மனைவியை, கணவர் முத்தலாக் எனச் சொல்லி விவாகரத்து செய்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

உத்தரப் பிரதேச மாநிலம், எட்டா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், உடல்நிலை சரியில்லாத தனது பாட்டியை பார்க்க தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அரை மணி நேரத்துக்குள் வீடு திரும்ப வேண்டுமென கணவர் கூறியிருந்த நிலையில், அந்தப் பெண் 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அவரின் கணவர், தமது மனைவியின் சகோதரரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். விஷயத்தை சொல்லியபடியே, முத்தலாக் எனக் கூறி மனைவியை விவகாரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

10 நிமிடம் தாமதமாக வந்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எனக் கேட்டுள்ள அந்தப் பெண், தமக்கு உரிய நீதி கிடைக்கவில்லையென்றால், தற்கொலை செய்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து  மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது,

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP