இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே! சாகசங்கள் நிறைந்த சரித்திரம்!

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே!
 | 

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே! சாகசங்கள் நிறைந்த சரித்திரம்!

அது 1947 இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பான காலக்கட்டம். இந்தியா முழுவதுமே சாதியப் படிநிலைகளிலும் இருந்த மக்களின் மனசிலும், வீட்டிலும் பெண்களின் மீதான ஒடுக்குமுறைகள் உச்சத்தில் இருந்த காலக்கட்டம். 

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே! சாகசங்கள் நிறைந்த சரித்திரம்!

சாதிய படிநிலைகளையும் தாண்டி, அது உயர் சாதியாக இருந்தாலும், வேறு எந்த சாதி உட்பிரிவாக இருந்தாலும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே பெரும் குற்றமாக கருதிய காலம். அப்படியான சூழலில் தான் சாவித்திரி பாய் பூலே தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து வெளியே வந்தார். தன் கணவர் நடத்திய பள்ளியில் ஆசிரியர் பணியாற்ற வீட்டை விட்டு வெளியேறி வந்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் தான் சாவித்திரி பாய் பூலே.

1831ல் இதே போன்றதொரு ஜனவரி மாதத்தின் 3ம் நாளில் தான் குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் உள்ள கண்டலா துறைமுகத்தின் அருகே இருக்கும் நைகோன் எனும் சிற்றூரில் பிறந்தார் சாவித்திரி பாய் பூலே. இன்றைய சாதி மறுப்புகளுக்கும், மேல் சாதிய ஆதிக்கங்களுக்கு எதிராக போராடுவதற்கும் விதைத்த முதன்மையானவர்களாக அறியப்பட்டவர்களில் மிக முக்கியமானவர்கள் சாவித்திரி பாய் மற்றும் அவரது கணவர் மகாத்மா ஜோதிபாய் பூலே.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே! சாகசங்கள் நிறைந்த சரித்திரம்!

இந்தியாவில், தாழ்த்தப்பட்டவர்களுக்கான முதல் பள்ளியை துவங்கியவர்கள் இவர்கள் தான். சிறுவயதிலேயே கல்யாணம் செய்து வைக்கப்பட்ட சாவித்திரிக்கு படிப்பறிவு இல்லை. ஆனால் அவரின் கணவர் ஜோதிபாய் பூலே, தனது  மனைவியை அப்படியிருக்க விடவில்லை. அவரை கல்வி கற்க வைத்து, கற்றதை மற்றவர்களுக்கும் கற்றுத் தர தன்னுடைய பள்ளிக்கு அழைத்துச் சென்றார். 

கணவனும், மனைவியுமாக வீட்டை விட்டு பள்ளிக்குச் செல்வதைப் பார்த்ஹ்ட கிராம மக்கள், இவர்கள் மீது கற்களை எறிந்தார்கள். மாட்டுச் சாணத்தைக் கரைத்து ஊற்றினார்கள். ஒரு பெண் சொல்லிக் கொடுத்து எங்கள் சமூகம் வளர வேண்டுமா? என்று பிற்படுத்தப்பட்ட சமூகமே இவர்களை எதிர்த்து நின்றது. 

இரட்டைக் குவளை முறையை ஒழிப்பதற்காக தங்களது வீட்டிலேயே கிணறு வெட்டி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு குடிநீர் கொடுத்தார்கள். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக மட்டுமல்லாமல், திறமையான கவிஞராகவும் அறியப்பட்டார் சாவித்திரி.

அவரின் கவிதை ஒன்று இப்படியாக விரிகிறது.,
உன்னில் நம்பிக்கை கொள்,
விழித்திரு உழைத்திரு
கல்வி இல்லையேல் எதுவுமில்லை
ஞானம் இல்லையேல் மிருகங்களே மிச்சமாகும்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP