Logo

சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி? கதறி அழுத வேட்பாளர்!

மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று கொண்டாடி வரும் வேளையில் 5 வாக்குகள் பெற்ற சுயேட்சை வேட்பாளர் கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சொந்த குடும்பமே ஓட்டு போடலன்னா எப்படி? கதறி அழுத வேட்பாளர்!

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று கொண்டாடிவரும் வேளையில், 5 வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளர் கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

542 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் நீது சட்டர்ன்வாலா என்பவர் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார்.

நேற்று நடைபெற்ற வாக்குகள் எண்ணிக்கையில் நீதுவுக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் அவரை பேட்டி கண்டபோது உடைந்து போன நீது, கதறி அழ ஆரம்பித்தார்.

காரணம் தெரியாமல் அச்செய்தி நிறுவனம் வெறும் 5 வாக்குகள் பெற்றதால் மனமுடைந்த அவர் அழுகிறாரா? என்று கேட்டனர். அதற்கு நீது "என் குடும்பத்தில் 9 பேர் உள்ளனர். ஆனால் எனக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. என் குடும்பத்தில் உள்ள 4 பேரே எனக்கு வாக்களிக்கவில்லை என்பதை நினைத்தால் மனம் வலிக்கிறது" என அவர் கண்ணீர் மல்க கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP