Logo

ஹரியானா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு!

ஹரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 5 வயது சிறுமி 16 மணி நேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
 | 

ஹரியானா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு!

ஹரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 5 வயது சிறுமி 16 மணி நேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்கப்பட்டார். 

ஹரியானா மாநிலம்,  ஹர்சிங்புரா கிராமத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமி சிவாமி நேற்று மாலை 5.30 மணியளவில் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை கேமரா மூலம் கண்காணித்தனர். தொடர்ந்து ஆழ்துளை கிணற்றிற்குள் சிறுமிக்கு தேவையான ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். கயிறு மூலம் சிறுமியை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். மேலும், பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணியும் நடைபெற்று வந்தது.

சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின்பு இன்று காலை 9.30 மணியளவில் சிறுமி கயிறு மூலம் ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார். உடனடியாக சிவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறுமி  இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் வீட்டினர் போர்வெல்லை திறந்து வைத்திருந்த அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக எம்.எல்.ஏ ஹர்விந்தர் கல்யாண் தெரிவித்துள்ளார். 

ஹரியானா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு!

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP