துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையினர்  4 பேர் சாவு

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இருவர் உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
 | 

இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியையொட்டி அமைந்துள்ள பட்காம், ஹண்ட்வாரா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

இப்பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று அதிகாலை, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி்ச் சூடு நடைபெற்றது.

பல நிமிடங்கள் நீடித்த இச்சண்டையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இருவர் மற்றும் ஜம்மு -காஷ்மீர் மாநில போலீஸார் இருவர் உயிரிழந்தனர். பொதுமக்களில் ஒருவரும் இதில் கொல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP