முதல் திருமணத்தை மறைத்து காதல்.. தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி

முதல் திருமணத்தை மறைத்து காதல்.. தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி
 | 

முதல் திருமணத்தை மறைத்து காதல்.. தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி

ஆந்திர மாநிலம் சித்தூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த பாத்திமா(20), அதே பகுதியை சேர்ந்த டிரைவர் இப்ராஹீம்(23) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இந்நிலையில் இப்ராஹீமுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பது பாத்திமாவுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாத்திமா, இப்ராஹீமிடம், ஏன் திருமணமானதை மறைத்து என்னை காதலித்து ஏமாற்றினாய் என்று கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களிடையே கடும் தகராறு ஏற்பட்டது. இந்த வேதனையில் இருந்த பாத்திமா, கல்லூரிக்கும் செல்லவில்லை. கடந்த 13ம் இரவு வீட்டின் ஒரு அறையில் அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டாராம்.

இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சித்தூர் 2வது டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். பாத்திமா இறந்ததை அறிந்த இப்ராஹீம் தலைமறைவானார். இந்நிலையில் பாத்திமாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இப்ராஹீமை விரைவாக கைது செய்யக்கோரி சடலத்துடன் 2வது டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த போலீசார், இம்ராஹீமை கைது செய்வதாக கூறியதன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP