ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்’எமர்ஜென்சி நிலை’

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு நிர்வாகமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 | 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்’எமர்ஜென்சி நிலை’

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு நிர்வாகமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குலுக்கு ஜெய்ஸ்ரீ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி அந்தஸ்து வழங்குவது தாெடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்’எமர்ஜென்சி நிலை’

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் நாளை இது தொடர்பான வழக்கில் கருத்து தெரிவிக்க உள்ளது.

இதைத்தொடர்ந்து 100 கம்பெனி அதாவது பத்தாயிரம் சிஆர்பிஎஃப் படைவீரர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் ஸ்ரீநகரில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை முன்னிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்’எமர்ஜென்சி நிலை’

அதே போல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் பகுதி மக்களுக்கு அடுத்த மாதம் வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் தற்போது வழங்கப்பட்டுவிட வேண்டும் என அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் விடுமுறையில் உள்ள ராணுவத்தினர், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் அவசர காலங்களில் தேவைப்படும் மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உபகரணங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் மாவட்ட அரசு மருந்து கிடங்களிலிருந்து பெற்று இருப்பு வைத்திருக்குமாறும், அந்த பணிகளை நிறைவேற்றும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கிடங்களும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பிரிவினைவாதிகள் என அடையாளம் கண்டறியப்பட்ட 200 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அறிவிக்கப்பபடாத எமர்ஜென்சியில் உள்ளது போல் சூழ்நிலை நிலவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்’எமர்ஜென்சி நிலை’

விரிவான அவசரகால ஏற்பாடுகளை மாநில நிர்வாகம் தீவிரமாக செய்துள்ளபோதிலும், இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் வெளிப்படையாக எவ்வித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP