டிக்டாக் பயங்கரம்: மூன்று பேரைக் கொன்ற டிக்டாக் வெறியன்!!!

உ.பி. மாநிலத்தில், தான் விரும்பிய பெண் உட்பட மூன்று பேரை கொன்ற டிக்டாக் வெறியனை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 | 

டிக்டாக் பயங்கரம்: மூன்று பேரைக் கொன்ற டிக்டாக் வெறியன்!!!

உ.பி. மாநிலத்தில், தான் விரும்பிய பெண் உட்பட மூன்று பேரை கொன்ற டிக்டாக் வெறியனை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் பிஜ்னூர் நகரை சேர்ந்தவர் அஸ்வானி என்கிற ஜானி தாதா. இவர் ஒரு டிக்டாக் வெறியன். கடந்த 5 நாட்களில், 3 பேரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

அஸ்வானி, கடந்த 2002 இல் நிக்கிதா என்ற பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் இவரின் காதலை ஏற்க மறுத்த அந்த பெண், மாறுதலாகி துபாய் சென்று விட்டார். துபாயில் வேலை செய்து வந்த அந்த பெண், தனது திருமணத்திற்காக சமீபத்தில் தௌலதாபாத் வந்துள்ளார். இவரது வருகையை அறிந்த  அஸ்வானி, நிக்கிதாவின் வீட்டிற்கே சென்று, அவரை துப்பாக்கியால் தாக்கியுள்ளார். சம்பவம் அறிந்து அந்த இடத்திற்கு விரைந்த போலீசார் கடந்த 24 மணி நேரமாக, அந்த நபரை கண்டுபிடிக்கும் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர் ஒரு போதை ஆசாமி எனவும்,  டிக்டாக் ஆப் - பில் பிரபல திரைப்பட வில்லன்களின் உரையாடல்களையே பேசியிருப்பதாகவும், அவர் வெளியிடும் வீடியோவின் கேப்ஷன்கள் எதிர்மறையாக பிறரை அழிக்கும் நோக்கத்திலேயே அமைந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

மேலும், ராகுல் குமார் மற்றும் கிருஷ்ண குமார் என்ற இரு பஜக தலைவர்களும் இவரால் கொல்லப்பட்டிருப்பதாகவும், அவர்களை கொன்றதற்கான காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இந்த டிக்டாக் வெறியனை வெகு விரைவில் கண்டுபிடிக்க, விரைவு அதிரடி படையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP