சிந்தியாவின் கேள்வி நியாயமானதே - கமல்நாத்

தேர்தலின் போது, 2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்களே, அதை நிறைவேற்ற முடிந்ததா காங்கிரஸால்? என்ற ஜ்யோதிராதித்தய சிந்தியாவின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் கமல்நாத்.
 | 

சிந்தியாவின் கேள்வி நியாயமானதே - கமல்நாத்

"தேர்தலின் போது, 2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்களே, அதை நிறைவேற்ற முடிந்ததா காங்கிரஸால்?" என்ற ஜ்யோதிராதித்தய சிந்தியாவின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்  கமல்நாத்.

கடந்த தேர்தளின் போது, ஆட்சியில் அமர்ந்த 10 நாட்களில், 2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர் காங்கிரஸ் கட்சியினர். அதை நிறைவேற்ற முடிந்ததா அவர்களால் என்று கேள்வியெழுப்பியிருந்தார், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜ்யோதிராதித்தய சிந்தியா.

இதற்கு பதிலளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் கமல்நாத், சிந்தியாவின் கேள்வி சரியானதே, ஆனால், மக்கள் அவர்களின் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். இப்போது ரூ. 50,000 வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் ரூ.2,00,000 வரையிலான விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், விவசாயிகளுக்கு எழுதிய கடிதத்தில், ரூ.7000 கோடி வரையிலான விவசாயி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்த கமல்நாத்தின் தற்போதைய பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜ்யோதிராதித்தய சிந்தியா மற்றும் கமல்நாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவி வருவதை போல, அக்கட்சியை  சேர்ந்த பல முக்கிய தலைவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP