சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்!

ஆண் சிறுத்தை ஒன்றை மாடுகள் கூட்டமாக கடித்துக் குதறி கொன்ற சம்பவம், மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உம்ரி -பாலாபூர் பகுதியில் ஒரு மாட்டு தொழுவதில் சுமார் 50 மாடுகள் அடைக்கப்பட்டிருந்தன.
 | 

சிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்!

ஆண் சிறுத்தை ஒன்றை மாடுகள் கூட்டமாக கடித்துக் குதறி கொன்ற சம்பவம், மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்துக்குட்பட்ட உம்ரி -பாலாபூர்  பகுதியில் ஒரு மாட்டு தொழுவதில் சுமார்  50 மாடுகள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு நேற்று நள்ளிரவு இரைத் தேடி சிறுத்தை ஒன்று வந்துள்ளது.

முதலில் அதனைக் கண்டு மிரண்ட மாடுகள்,  பின்னர் சுதாரித்துக் கொண்டு 30- 35 மாடுகள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை சுற்றி வளைத்துள்ளன. மாடுகளின் பிடியிலிருந்து மீள சிறுத்தை எவ்வளவோ முயன்றும் அதனால் தப்பிக்க  முடியவில்லை.

சற்று நேரத்தில் மாடுகள் மாறி மாறி கடித்து குதறியதில் சிறுத்தை உயிரிழந்தது. தகவலறிந்து வனத் துறையினர் அங்கு வருவதற்குள் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த கொடூர சம்பவத்தை அருகில் இருந்து வேடிக்கை பார்த்த மற்றொரு சிறுத்தை, பயத்தில் தப்பியோடிவிட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP